“Satendru MaaruthuVaanilai” the erstwhile title of “Acham Yenbathu Madamaiyada” aka AYM starring "STR" alongside with debutante "Manjima Mohan", Dancer "Sathish" and the veteran singer "Baba Sehgal" with master class direction by GVM has finally hit the screens after a long waiting.
0 Comments
"ஒரு நாயகன் உதயமாகிறான்..." என்ற இளையராஜா பாடலை நாம் கேட்டிருப்போம். இந்த பாடலுக்கு அர்த்தம் சேர்த்து தன்னைத்தானே செதுக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் "ஆண்மகளாய்" நடித்து மிகுந்த எதிர்பார்புடன் வெளிவந்திருக்கும் படம் ரெமோ. அணைத்து கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் என்பது போல சிவா கார்த்திகேயன் இப்ப "உச்சத்துல சிவா". ஒருவிதமான மாஜிக் கண்டிப்பாக சிவா விற்கு உள்ளது. அந்த மாஜிக் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டுமே பொருந்தும். பார்த்தவுடன் இவன் நம்ம ஆளுடா என தோன்ற வைக்கும் தோற்றம். நக்கல் நய்யாண்டி தாண்டி இந்த படத்தில் நின்று விளையாடி இருக்கிறார் சிவா. எல்லாரும் சிவாவை அதிஷ்டத்தால் ஹீரோவாயிட்டார் என சொன்னதாலோ என்னவோ அவர் காமெடி தாண்டி நடிக்க வேண்டிய கட்டத்திற்கு வந்துள்ளார். ஆண்டாண்டு காலமாய் தமிழ் சினிமாவில் அரைத்த கதைதான் ரெமோ. அஜித் நடித்த “காதல் மன்னன்” தொடங்கி, ஜெயம் ரவி நடித்த “ரோமியோ ஜூலியட்” வரை ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் காதல் ஏற்படும் பொது அந்த திருமணம் என்ன ஆகும். நிச்சயமானவனுடன் கரம் கோர்த்தாரா அல்லது ஹீரோவுடன் கை கோர்த்தாரா என்பதுதான் ரெமோ சுருக்கம்.கொஞ்சம் பெசகினாலும் பாதை மாறும் கதை, சொல்லி சொல்லி புளித்த திரைக்கதை என இப்படி இருந்தாலும் சிவா கார்த்திகேயன் என்ற ஒரு மாஜிக் இந்த எண்ணத்தை அடித்து நொறுக்குகிறது. “He is not a boy next door anymore” தமிழ் சினிமாவின் வழக்கப்படி வேலை வெட்டி இல்லாத சிவா தன் நண்பர்கள் சதிஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியவர்களுடன் சேர்ந்து சினிமாவில் ஹீரோ ஆகவேண்டும் என முயற்சி செய்கின்றனர். நடுவில் பார்த்தவுடன் டாக்டர் ஆக இருக்கும் கீர்த்தி சுரேஷிடம் மனதை பறிகொடுக்கிறார் நம்ம ஹீரோ (கொடுத்துதானே ஆகவேண்டும்). அவர் வீட்டு அட்ரஸ் கண்டு பிடித்து தன் காதலை சொல்ல போகும் பொது ஏதிர்பாராத விதமாக அன்று அவர் நிச்சயதார்த்தம் நடக்கிறது. மனம் நொந்து திரும்புகிறார் சிவா. ஒரு கட்டத்தில் சான்ஸ் கேட்டு டைரக்டர் கே.ஸ். ரவிக்குமார் இடம் செல்லும் பொது அவர் என் கதைக்கு ஹீரோ பெண் வேடம் போட வேண்டும் என சொல்ல நர்ஸ் வேடம் போட்டு செல்கிறார் நம்ம சிவா. நடித்துவிட்டு பேருந்தில் வரும் பொது ஏதிர்பாராமல் கீர்த்தி சுரேஷை பார்க்க அவரும் இவர் பெண் என நினைத்து அவருக்கு தான் வேலை செய்யும் மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி கொடுக்க அப்புறம் என்ன நம்ம சிவாவின் அதகளம் தொடங்குகிறது. ஒரு சாதாரண கதையை வைத்துக்கொண்டு அசாதாரண கலைஞர்களை சேர்த்து கொண்டு தைரியமாக கபடம் எடுத்த புதுமுக இயக்குனர் பாகியராஜ் கண்ணுக்கு வாழ்த்துக்கள். பார்க்க பார்க்க சலிக்காத ஒளிப்பதிவை PC ஸ்ரீராம் மட்டுமே வழங்க முடியும். Exotic visuals - That’s why they are masters. அவருக்கு இது தான் முதல் கமெர்ஷியல் படம் என நினைக்கிறேன். மனுஷன் தன் போக்கில் விளையாடி இருக்கிறார். நிறைய கலர் படத்தில் வைத்திருக்கிறார். சில இடங்களில் சற்று தூக்கலாக தெரிந்தாலும் என்ன வேண்டுமோ அதை கொடுத்துள்ளார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைன் சிவாவின் ஆண், பெண் குரல்களை துல்லியமாக வேறு படுத்துகிறது. ரூபனின் எடிட்டிங் கச்சிதம். குறிப்பாக பாடல் காட்சியில் ஷார்ப் கட்டிங்ஸ். முக்கியமாக “Weta Workshop” பற்றி சொல்ல வேண்டும். என்னடா ஷங்கரின் "ஐ" மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு மேக்கப் போட்ட Weta Workshop சிவா படத்திற்க்கா? என வாய்பிளந்தவர்களுக்கு நல்ல பதில் சொல்லி இருக்கின்றனர். சரியான மேக்கப் இல்லாவிட்டால் இது ஒரு cliche வாக வந்திருக்கும். படத்தில் நம்மை அங்கங்கே கட்டிபோடுவது டைமிங் காமெடியால் அதிரவைக்கும் சிவா, சதிஷ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு & கோ. சிவாவிற்கு கை வந்த கலையான டைமிங் காமெடி படத்தில் எங்க வைக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து வைத்துள்ளனர். சிறிது சோர்வானாலும் உடனே அதை மறக்க செய்யும் விதமாக ஒரு காமெடி. தரை அரங்கம் அதகளம். கீர்த்தி சுரேஷ் என்ன ஒரு அழகு. அவரின் உடல் மொழி, பார்வை, சிரிப்பு என இளையஞர்களை கிற்ங்கடிக்கிறார். சிவாவிற்கு இணையான விசில் சத்தம் அவருக்கு. குறும்பு பெண்ணாக வருவதிலாகட்டும், அன்போடு காதல் மொழி பேசி நடிப்பதில் ஆகட்டும் கீர்த்தி சுரேஷ் சபாஷ். படத்தையும் தாண்டி நம்மையும் காதல் செய்ய வைக்கிறார். இந்த திரைப்படம் மேக்கிங் என்ற ஒன்றால் அனைவரையும் ரசிக்கும் படி செய்கிறது. படம் அவ்வளவு கலர்புல். இது குற்றம் குறை பார்த்து விமர்சனம் செய்யும் பார்வையாளர்களுக்கான படம் அல்ல. சந்தோசமாக எல்லாவற்றையும் மறந்து கவலை மறந்து சிரித்து கொடுத்த காசுக்கு பைசா வசூல் செய்யும் வெகுஜன மக்களுக்கான படம். திரை அரங்குகளை படை எடுக்கும் இளையகர்கள், பெண்கள், குட்டிஸ், தாத்தா, பாட்டி என அனைவரும் சிவா கார்த்திகேயன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர், இதை அவர் நன்றாக புரிந்து வைத்துள்ளார். நடிகர் விஜய் ஒரு விழாவில் சொன்னது போல் சிவா நம் வீட்டு வாண்டுகளை கவந்துள்ளார். அடுத்த தலைமுறையில் ஒரு தவிர்க்க முடியாத ஹீரோ சிவா கார்த்திகேயன் என்றால் அது மிகையில்லை. சரியான பாதையில் தவறாது சென்றால் அவர் உயரம் வானம் தான். வாழ்த்துக்கள் சிவா. இதே போன்று இந்த இயந்திர உலகத்தில் இருந்து ஒரு 3 மணி நேரம் எங்களை சிரிக்க வையுங்கள், சிந்திக்க வைக்க இங்க பல பேர் உள்ளனர். ரெமோ, நீ காதலன். |
Archives
November 2016
AuthorVignesh Viswanathan. |