பொதுவாக திருமணங்கள் கடவுளால் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்பது நமது நம்பிக்கை. மாறாக ஆண்டவன் கட்டளையால் அப்படி ஒரு திருமணம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிச்சயிக்கப்பட்டால் ? இதுதான் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி, “இறுதி சுற்று” புகழ் ரித்திகா சிங் நடித்து (வாழ்ந்து) வெளிவந்திருக்கும் "ஆண்டவன் கட்டளை" திரைப்படத்தின் கதை. வர வர விஜய் சேதுபதி வெள்ளிக்கிழமை நாயகனாக மாறியுள்ளார். இந்த வருடத்தில் தற்போது வரை 5 படங்கள் விஜய் சேதுபதிக்கு வெளி வந்து அணைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றி நாயகனாக உருவாகி உள்ளார். "வளர்ச்சி" என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் விஜய் சேதுபதி. பி கு: அடுத்த மாதம் விஜய் சேதுபதியின் "றெக்க" ரிலீஸ் ஆகவிருக்கிறது. விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் நண்பர்கள். கிராமத்து இளைங்கன் விஜய் சேதுபதிக்கு ஊரில் தீராத கடன் தொல்லை. கடன் கழுத்தை நெறிக்க அவரின் லண்டன் ரிட்டன் நண்பரான “நமோ நாராயணன்” அட்வைஸ் படி சென்னை சென்று ஒரு ட்ராவல் ஏஜென்ட் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் போக ஏற்பாடு செயகின்றனர். ஒரு சின்ன பொய் சொல்ல போக அதனால் ஏற்படும் விளைவுகளும் அதை சரி செய்தாரா ? லண்டன் போனாரா ? என்பது மீதிப்படம். மணிகண்டனிடம் ஒரு நேர்த்தியான ஸ்டோரி டெல்லிங் உள்ளது. தனக்கு இதுதான் வரும் என்று முடிவு செய்து எந்த வித காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர தேர்வுதான். முக்கியமாக 3 கதாபாத்திரங்கள்: யோகி பாபு - விஜய் சேதுபதியின் நண்பராக மட்டுமில்லாமல் ஒரு வெகுளியாக அவர் செய்யும் ஓவொன்றும் அலப்பறை ரகம். விசா வாங்கும் இன்டெர்வியூ ஆகட்டும், விசா கிடைத்தவுடன் காட்டும் கெத்து, போலி விசாவினால் நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பி நடந்தவற்றை கூறும் போது வெளிப்படுத்தும் emotions அனைத்தும் ஆவ்சம். இந்த படத்தின் இன்னொரு ஹீரோ அவர். தியேட்டரில் வரும் கைதட்டலே அதற்க்கு சாட்சி. இலங்கை நாட்டவர்: மனைவி மற்றும் மகளை தொலைத்து இலங்கை அகதியாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து காவல்துறைக்கு பயந்து ஊமையாக நடிப்பதில் ஆகட்டும், முக்கியமா கட்டத்தில் போலீஸிடம் உண்மையை கூறி செல்வதில் ஆகட்டும் மனுஷன் பின்னி இருக்கார். துப்பறியும் போலீஸ் அதிகாரி: சேதுபதி படத்தில் எப்படி ஒரு investigation ஆபிசர் வந்தாரோ அது போல பார்வையில் மிரட்டியே உண்மையை வாங்கிவிடுகிறார். சிறந்த பாத்திர தேர்வு. மற்ற கதாபாத்திரங்களாக பூஜா தேவரியா, நாசர், சிங்கம் புலி, சீனு ராமசாமி, வினோதினி வைத்தியநாதன் ஆகியயோர் பளீச் தேர்வு. கதையின் நாயகியாக வரும் "கார்மேகக்குழலி" ரித்திகா சிங் சின்ன சின்ன முக பாவணைகளால் கவர்கிறார். தமிழ் லிப் சிங்க் ஆகாத பல வட இந்திய ஹீரோயின் மத்தியில் சிறந்த உதடசைவால் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதி மேல் காதல் வயப்படும் இடத்தில் ,கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவிற்கு ஓகே சொல்லி ஒரு 30 செகண்ட் ரியாக்ஷன் கொடுப்பதில் சிக்ஸர் நடிப்பு. தைரியமான ரிப்போர்ட்டராகவும் , துரு துரு வென இருப்பதிலும் தாண்டி ஒரு ஆனைப்பார்க்கும் இடத்தில் தன்னை அறியாமல் பெண்ணியம் தோற்றுவிப்பது கொள்ளை அழகு. அனைத்து விஷயங்களையும் தாண்டி மணிகண்டனின் டிரேட் மார்க் சமூக நலன் மெசேஜ் சரியான இடத்தில் அமர்ந்து இருக்கிறது. வாடகைக்கு வீடு தேடும் சிரமங்கள், வீடு ஓனர்களின் சுரண்டல்கள், இலங்கை தமிழர்களின் வலிகள், சமூகத்தில் அவர்கள் பார்க்கப்படும் விதம், அரசு இயந்திரன்களின் ஓட்டைகள், இடைத்தரகர்களின் அடாவடி என போகிற போக்கில் மெசேஜ் சொல்லி கதையோடு கோர்த்ததில் நேர்த்தி. "கே" வின் பின்னணி இசை படத்தினை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. கதைக்கு தேவையான 2 பாடல்களை மட்டும் கொடுத்து சபாஷ் வாங்குகிறார். ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு யதார்த்தத்தை கண்முன் கொண்டுவருகிறது. படத்தில் சிறிது சிறிதாக பல ஷாட்கள் கேண்டிடாக காட்டியுள்ளார். ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இனைவது ஆண்டவன் இட்ட கட்டளை என்ற கதைக்கருவினை எடுத்துக்கொண்டு இப்படி ஒரு படம் தருவது சாதாரணமல்ல. நாம் சொல்லிய ஒரு பொய் அதை மறைக்க நாம் செல்லும் குறுக்குப்பாதையால் வரும் விளைவுகள் ஆகியவற்றை காட்டி உண்மை சொல்வதே என்றும் பலம் என்ற கருத்தை ஆணித்தனமாக சொன்னதில் மணிகண்டன் & கோ சாதித்துள்ளது. எதார்த்த சினிமா என்பது பொதுவாக தமிழ் சினிமாவிற்கு எப்போதாவது தான் பரிச்சியம். எதார்த்த வகை சினிமா என்பது நாம் படம் பார்க்கும் பொழுது நமது வாழ்க்கை சூழலை விட்டு விலகாமல் நாம் அன்றாடம் பார்க்கும் விஷயங்களை ஒன்றாக கோர்த்து படைப்பது. எந்த இடத்திலும் இது சினிமா என செல்லவிடாமல் செய்வது. இவ்வகை சினிமாக்கள் பொதுவாக மலையாள சினிமாக்களில் அதிகம். லாலேட்டன் ஜார்ஜ் குட்டியாக வாழ்ந்ததும், நய்யாண்டி நாயகன் நயாகரா நீர் வீழ்ச்சியில் டூயட் பாடியது தான் எதார்த்தத்தின் முரண். கமல் சொல்வது போல் எதார்த்த சினிமாதான் வேணும் என சொல்லல அப்பப்போ வந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன். இப்படிப்பட்ட எதார்த்த சினிமாவை எடுக்கும் மணிகண்டனுக்கும் இதை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் பார்த்துக்கொண்டாட வேண்டிய திரைப்படம்.
1 Comment
Train - a name that excites us each time whenever we hear. It's majestic look, long coaches and a high decibel horn thrills us often. Imagine you are travelling in a train and hoping for an exciting and memorable journey. But, there comes a situation that the train which your'e travelling that runs at high speed is "unstoppable" due to a human error and all the passenger's lives are endangered, what will be the scenario after that?
An unmanned, half-mile-long passenger train hurtles towards a town at breakneck speed that's almost unstoppable - that's the story line of #DenzelWashington starer 2010 super hit racy Hollywood flick "Unstoppable" is all about. Inspired from the original Hollywood flick #Unstoppable director #PrabhuSolomon tried adding an extra pantry coach to prepare some dish with Love and other Masala items which ends up serving a half - baked and over cooked dish. #TooSpicy Thodari is about a love of a couple in a train journey between Delhi to Chennai taking us along for a ride in Express and Passenger trains one after another with tracks changing frequently (shakes a lot) and accommodate us RAC quota (No AC or Sleeper). It is a movie that portrait a Love between a Pantry Vendor "Poochiyappan" (Dhanush) and a popular heroine's makeup assistant "Saroja" (Keerthy Suresh) happening in an unmanned train and tells us how their love helps to overcome the problem. Backed by the star cast of "Datho" Radha Ravi, Thambi Rammaiah, Karunakaran, Darbuka Siva (Kidari Movie Music Director), Imman Annachi, Harish Uthaman, Ganesh Venkatraman, director A.Venkatesh alongside with the come back of legendary "Chinni Jeyanth". The plot seems to be confused in it's scripting, thus the director confused himself whether to present this as a racy thriller or a love film or a masala commercial. At the end It is a mixture of all this genre. Movie kicks off in a slow speed with boring comedy sequences and accelerates at full speed towards the interval. The good part of the movie was it's Second Half with which the director escapes this movie from derailing. The right Comedy element (worked well in second half only) mixed with a political/media satire taking one on one about the News Hunting medias & politicians, Useless talk shows they conduct and slammed well on how the media is changing it's track. Notably the Radha Ravi gets applause from audience in many places with his dialogues. Dhanush has given a decent performance - he couldn't do much as the scope is higher for the female lead and he has acted well. Keerthy Suresh is taking the storm among audience with her rural homely look and simple costume. She is taking the hearts of youths with her cute expressions. The poor and unnecessary CG works, unrealistic landscapes (again CG) and defying Law of Physics in action sequences will give a weird and cliche look for the matured audience. It's quiet odd to believe that someone can dance for a duet number on the top of a speedy train said to be running at 120 Kms per hour, unmanned. D.Imman's melody numbers gives a breezy feeling in the midst of slow moving spots. Vetrivel Mahendran's has tried to give a good Cinematography showing different landscapes and areas. Many aerial shots have beautifully captured by him. Editing by L.V.K. Doss could have used his scissors in many places. The film is running almost 3 hrs which is too lengthy to watch. Let us keep the logic aside. As a general audience it was good watching experience because of the comedy elements with political satire that entertains the second half. There were many applause from the audience in many second half sequences. The team has highly compromised in the areas like CG, Sets and Props used. Verdict: A different locomotive ride that gives you a mixed experience finally reached in a wrong platform. Will be an average grosser for #Dhanush Watchable once. |
Archives
November 2016
AuthorVignesh Viswanathan. |